கல்வித்துறையின் அபிவிருத்திக்கு இலங்கை அரசாங்கம் உயர் முன்னுரிமையளித்துள்ளது. இதில் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி உட்பட ஆரம்ப கல்வியிலிருந்து மூன்றாம் நிலை கல்வி வரைக்கும் உள்ளடங்குகின்றது. இந்த நாடு உலக அறிவின் உறைவிடமாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் ஊடாக யுனெஸ்கோ கல்வித்துறைக்கான வரைவிலக்கணங்கள், தரங்கள், விதிமுறைகள் என்பவற்றை வழங்குகின்றது. மேலும் இலங்கையின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கக்கூடிய வகையில் கல்வியைப்பற்றி உலக மற்றும் பிராந்திய தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களையும் வழங்குகின்றது.

"அனைவருக்கும் கல்வி" உலக கண்காணிப்பு அறிக்கை தேசிய ரீதியாக ஒவ்வொரு வருடமும் சம்பந்தப்பட்ட பங்கீடுபாட்டாளர்களுடைய கூட்டிணைவுடன் வெளியிடப்படுகின்றது. கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முன்னெடுப்புக்கு வலுவான பங்களிப்புச் செய்ய இலங்கையில், மீப்பேயிலுள்ள யுனெஸ்கோ வகை 2 நிலையம் என்ற வகையில் ஆசிரியர் அபிவிருத்திக்காக தெற்காசிய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தரங்களை மேம்படுத்துதல், கல்வி உள்ளிட்ட சமூக சகவாழ்வை மேம்படுத்துதல், நிலைபேறான அபிவிருத்திக்கும் சமாதானத்திற்கும் கல்வியை மேம்படுத்துதல் என்பவற்றுடன் சேர்த்து முன்னிளம் பருவ கவனிப்பையும் கல்வியையும் மேம்படுத்துதல் போன்ற அரசாங்கத்தின் மனித வள அபிவிருத்தி தொடர்பிலான ஏனைய அரசாங்க முன்னெடுப்புகளுக்கு யுனெஸ்கோ தொடர்ச்சியாக ஒத்துழைப்பு நல்குகிறது. அதற்கு மேலதிகமாக தொடர்பு மொழி என்ற வகையில் ஆங்கில் மொழி கற்பித்தலை ஊக்குவிப்பதற்கு யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு அதன் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் பொருத்தமான ஆளணியினருக்கு திறன் விருத்தி மற்றும் மனித வள அபிவிருத்தி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தரமான கல்வி அபிவிருத்திக்காக உதவிகள் கோரப்படுகின்றபோது நிபுணர்களின் உதவியும் தொழில்நுட்ப ஒத்துழைப்பும் வழங்கப்படுகின்றன.