யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு (SLNCU) வின் பிரதான செயற்பாடுகள்
- யுனெஸ்கோ அளவுகோலுக்கு ஏற்றவகையில் உள்நாட்டு அபிவிருத்தி செயல் நோக்கை இசைவுறுத்துவதன்மூலம் தேசிய நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்காக கல்வி, விஞ்ஞானம், கலாசாரம், வெகுசன தொடர்பாடல், சமூகவியல்; மற்றும் சூழலியல் என்பவற்றிற்குப் பொருந்தக்கூடிய அபிவிருத்pயை அடைவதற்கு ஒவ்வொரு அமைச்சுடன் இணைப்பாக்கத்துடன் மற்றும் கூட்டிணைந்து செயலாற்றுதல்.
- சமாதானத்தையும் நிலைபேறான அபிவிருத்தியையும் உறுதிப்படுத்துவதற்கு யுனெஸ்கோவுடன் வேலைசெய்கின்ற ஏனைய நிறுவனங்களுடன் அரசாங்கமும் அரசசார்பற்ற நிறுவனங்களும் கைகோர்த்துக்கொள்ளுதல்.
- உள்ளூர் பாடசாலை முறைமைகளில் புதிய எண்ணக்கருக்களை, அத்தகைய எண்ணக்கருக்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவை எவ்வளவு தூரத்திற்கு வெற்றியளிக்கின்றன என்பதைப் பரீட்சிப்பதற்கு பரீட்சார்த்த கருத்திட்ட நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதல்.
- உள்ளூர் மரபுரிமைகள் மற்றும் உள்ளூர் அபிவிருத்தியின் புதிய விடயங்கள் என்பவற்றிற்காக சர்வதேச கௌரவத்தையும் பாதுகாப்பையும் பெறுவதற்காக செயலாற்றுதல்.
- யுனெஸ்கோவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகள், பயிற்சி செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- எமது நாட்டுக்குப் பொருந்தக்கூடிய கருத்திட்டங்களையும் யுனெஸ்கோவின் உலக எண்ணக்கருக்களையும் அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற நிதியங்களைப் பெற நடவடிக்கை எடுத்தல்.
யுனெஸ்கோவின் முன்னுரிமைகள்
- அனைவருக்கும் தரமான கல்வியின் ஊடாக நல்லொழுக்கத்தையும் அறிவையும் மேம்படுத்துதல்
- கலை கலாசாரத்திற்கு செறிவூட்டல்
- நிலைபேறான சமாதானமும் சமூக சகவாழ்வும்
- கைத்தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி
- சூழலியல் நிலைபேறான தன்மை
- விளையாட்டின் ஊடாக உடல் வலிமையை உறுதிப்படுத்துதல்
- தொடர்பாடலையும் தகவல் விரிவாக்கத்தையும் பலப்படுத்துதல்
யுனெஸ்கோவின் பிரதான செயற்பாடுகள்
கல்வி
|
|
விஞ்ஞானம்
- விஞ்ஞானம், சூழலியல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி (SED)
- நிலைபேறான அபிவிருத்திக்கு இயற்கை மற்றும் புவியியல்
- சர்வதேச சமுத்திரவியல் ஆணைக்குழு (IOC)
- மனிதன் மற்றும் உயிர்க்கோள நிகழ்ச்சித்திட்டம் (MAB)
- சர்வதேச நீரியல் நிகழ்ச்சித்திட்டம் (IHP)
- அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தணித்தல்
சமூக விஞ்ஞானம்
- சமாதானமும் ஐக்கியமும்
- விஞ்ஞானம் மற்றும் தத்துவத்தின் நெறிமுறை
- மனித உரிமையும் சனநாயகமும்
- வறுமை ஒழிப்பு
- சமூக நிலைமாறல் முகாமைத்துவம்
கலாசாரம்
- உலகளாவிய கலாசார மரபுரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பேணுதல்
- தொட்டுணர முடியாத மரபுரிமைகளை அடையாளம் காணுதல் மற்றும் பேணுதல்
- கலாசார சொத்துக்களைப் பாதுகாத்தல்
- Promoting intercultural dialogue
- கலாசார பல்வகைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல்
தொடர்பாடல் மற்றும் தகவல்
- கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை ஊக்குவித்தல்
- சர்வதேச தகவல் மற்றும் அறிவு என்பவற்றை அடைவதற்கான திறனைக் கட்டியெழுப்புதல்
- சமூக வானொலி நிலையங்கள் ஊடாக சமூகத்தின் திறனைக் கட்டியெழுப்புதல்
- ஊடக அபிவிருத்தியைப் பேணுதல்
- அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களுக்கான தகவல்
- சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதையும் தகவலறியும் உரிமையையும் ஊக்குவித்தல்