ஸ்ரீபாத மலைத் தொடர்
ஸ்ரீபாத மலைத் தொடர் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ளது இதில் உயர் உயிர் பல்வைகமையும் இந்த நாட்டில் மட்டும் இருக்கின்ற தாவரங்களையும் விலங்கினங்களையும் கொண்டிருக்கின்றது. இந்த அதிசிறந்த விழுமியங்களைக் கவனத்திற்கொண்டு யுனெஸ்கோ இந்த மத்திய மலைநாட்டை 2010ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அதிசிறந்த இயற்கை மரபுரிமை விழுமியங்களுக்கு மாத்திரமல்ல அதற்கு இதிகாசம், நம்பிக்கை, சடங்குகள் மற்றும் யாத்திரை வழிவந்த கலாசார விழுமியங்கள் இருக்கின்றன. இது இலங்கையிலுள்ள மிக முக்கியமான யாத்திரை தலமாக விளங்குகின்றது. பௌத்தர்களைப் பொறுத்தமட்டில், ஸ்ரீபாத (புனித பாதச் சுவடு) புத்த பெருமான் இந்த மலை உச்சியில் உள்ள பாறையில் தனது பாதச் சுவட்டைப் பதித்துச் சென்றதாக ஐதீகம். தற்பொழுது இங்கு ஒரு ஆலயம் இருக்கின்றது. விசாக வைகாசி நோன்மதி தினத்துடன் யாத்திரை காலம் ஆரம்பமாகின்றது. ஸ்ரீபாத யாத்திரையின்போது சீத கங்குல, இதிகட்டுபஹன, மகாகிரிதம்ப மற்றும் லிஹினிபொல ஆகியவை தரிசிக்க வேண்டிய இடங்களாகும்.
நக்கிள்ஸ் மலைத் தொடர்
இலங்கையின் மத்திய மலைநாட்டில் மூன்று பிரதான பகுதிகளான ஸ்ரீபாத, நக்கிள்ஸ் மலைத் தொடர் மற்றும் ஹோர்ட்டன் சமவெளி என்பவற்றைக் கவனத்திற்கொண்டு யுனெஸ்கோ இலங்கையின் மத்திய மலைநாட்டை 2010ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கிள்ஸ் மலைத் தொடரும் மத்திய மலை நாட்டில் அமைந்துள்ளது. இதில் உயிர் பல்வகைமையையும் இந்த நாட்டுக்கே இயல்பாகவுள்ள தாவரங்களும் விலங்கினங்களும் இருக்கின்றன. இது 1988ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்ட்டன் சமவெளி
ஹோர்ட்டன் சமவெளி மத்திய மலைநாட்டில் உலக மரபுரிமை அமைவிடத்தில் 3,158.8 ஹெக்டயாரில் அமைந்துள்ளது. அது மலையக மழை வனத்தையும் திறந்த புல் வெளியையும் கொண்டுள்ளது. குடை வடிவில் அமைந்துள்ள வன சமவெளிகள் இந்த சமவெளிகளுக்கு மேலும் வனப்பூட்டுகின்றன. இது 2010ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.