நிறைவேற்று சபை
யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கையின் வேட்பாளர்
இலங்கை நான்கு சந்தர்ப்பங்களில் மாத்திரம் நிறைவேற்று சபையின் அங்கத்தவராக இருந்தது: 1968-1974, 1987-1991, 2003-2007 மற்றும் 2007-2011. 2011ஆம் ஆண்டு சிறிய அரச தீவாவதற்கு விலகியது.
யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் (SLNCU) தலைவர் என்ற வகையில், கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் 2015-2019 காலப்பகுதிக்காக யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.
அமர்வு | காலம் | இலங்கையின் பங்குபற்றுனர் |
நிறைவேற்று சபையின் 204வது அமர்வு | 2018 ஏப்பிரல் 7 - 12 | கல்வி அமைச்சர், செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம் |
நிறைவேற்று சபையின் 205வது அமர்வு | 2018 ஒக்டோபர் 5 - 9 | கல்வி அமைச்சர், செயலாளர் நாயகம் |
நிறைவேற்று சபையின் 206வது அமர்வு | 2019 ஏப்பிரல் 3 - 17 | கல்வி அமைச்சர், செயலாளர் நாயகம் |
பொது மகாநாடு
யுனெஸ்கோவின் பொது மகாநாட்டின் 40வது அமர்வு 2019 நவம்பர் 12 முதல் 27 வரை பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமை தலைமையகத்தில் நடைபெறும்.
அமர்வு | காலம் | இலங்கையின் பங்குபற்றுனர் |
பொது மகாநாட்டின் 38வது அமர்வு | 2015 நவம்பர் 3 - 18 | செயலாளர் நாயகம |
பொது மகாநாட்டின் 39வது அமர்வு | ஒக்டோபர் 30 முதல் 2017 நவம்பர் 14 | செயலாளர் நாயகம |
பொது மகாநாட்டின் 40வது அமர்வு | 2019 நவம்பர் 12 - 27 | - |
யுனெஸ்கோ ஒருங்கிணைக்கப்பட்ட பாடசாலை வலையமைப்பு (ASP)
இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு உலகளாவிய ரீதியில் யுனெஸ்கோவின் ஒருங்கிணைந்த பாடசாலை வலையமைப்பு கல்வி நிறுவனங்களை இணைக்கின்றது.
யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு (SLNCU) இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்ளுவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றி ஐம்பத்தெட்டு (158) பாடசாலைகளைத் nதிரிவுசெய்துள்ளது. இப்பாடசாலைகளுக்கிடையில், இருபத்தைந்து பாடசாலைகள் பாரிஸ், யுனெஸ்கோவின் ASP வலையமைப்புடன் பதிவுசெய்துகொண்டுள்ளன.
யுனெஸ்கோ புலமைப்பரிசு நிதியம்
இலங்கையில் இடம்பெயர்ந்த மற்றும் ஊனமுற்ற பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 1999ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் யுனெஸ்கோ புலமைப்பரிசு நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த நிதியம் கல்வி அமைச்சில் யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் (SLNCU) கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி முகாமைத்துவ சபையினால் இது நிர்வகிக்கப்படுகிறது. அத்துடன் குறித்த சட்டத்தின் (3) (2) (அ) பிரிவின் பிரகாரம் கல்விக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்த சபைக்குத் தலைமை தாங்குகிறார்.
2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில், பெற்றோர்கள் இல்லாத மற்றும்/அல்லது ஊனமுற்ற பாடசாலை செல்லும் 34 பிள்ளைகளுக்கு இந்த நிதியத்தின் ஊடாக அவர்கள் பாடசாலை கல்வியை நிறைவுசெய்யும் வரைக்கும் மாதாந்தம் ரூ. 2,000/- வீதம்; நிதி உதவி வழங்குவதை நாம் ஆரம்பித்துள்ளோம்.
SLNCU Meetings
The meeting report of the first-ever ICH Meeting held and hosted by the SLNCU dated 06.09.2019 at the Ministry of Education
{sliderSACTD}
South Asian Centre for Teacher Development (SACTD) is a Category II Centre established under the auspices of UNESCO to be a service provider, standard setter and a research management centre in the field of teacher development in the South Asian sub-region.
The specialized functions of the Centre are:
- Professional development of teacher educators/counsellors/advisors/mentors for school-based teacher development
- Research and development in teacher education
- Teacher curriculum development
- Capacity development in areas of teachers’ ICT competency and e-pedagogy
In conformity with 36 C/Resolution 15 of UNESCO General Conference, which seeks to favour international Cooperation in respect of teacher development and quality education, SACTD was established by the National Institute of Education (NIE) Act No: 28 of 1985 of Sri Lanka.